முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..!

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஒரு படத்திலும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இவற்றில் ராஜேஷ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக செய்தி வெளியிட்டனர். அது என்னவென்று தற்போது தெரிந்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அநேக படங்களுக்கு அனிருத், இமான் இசையமைத்து வந்த நிலையில் இப்போது இந்தப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் – ஆதி இணைவது இது தான் முதல்முறை.