ஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்!!

அமெ­ரிக்கா ஈரா­னின் மீது விதித்த பொரு­ளா­தா­ரத் தடை­கள் நேற்று நடை­மு­றைக்கு வந்த நிலை­யில் குறித்த தடைக்கு ஒரு நாளுக்கு முன்­ன­தாக அதா­வது நேற்­று­முன்­தி­னம் ஐந்து வானூர்­தி­களைக் கொள்­வ­னவு செய்­தது ஈரான்.

அணு ஆயுத பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து சமீ­பத்­தில் வில­கி­க்கொண்ட அமெ­ரிக்கா, அடுத்­த­டுத்து ஈரான் மீது பல்­வேறு பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்து வரு­கி­றது.

தனது நேச­நா­டு­க­ளும் ஈரா­னைப் புறக்­க­ணிக்க வேண்­டும் என அமெ­ரிக்க அய­லு­ற­வுத் துறை­யின் சார்­பில் நிர்­பந்­திக்­கப்­ப­டு­கி­றது. எனி­னும் ஈரா­னு­டன் தாம் கொண்­டுள்ள வர்த்­த­கத் தொடர்­பு­களை உலக நாடு­கள் தொடர்ந்­து­கொண்­டு­தான் உள்­ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்­றும் இத்­தா­லி­யின் கூட்டு நிறு­வ­ன­மான ஏடி­ஆர் உடன் 72-600 ரக பய­ணி­கள் விமா­னங்­களை வாங்க ஈரான் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டது.

அதன்­படி ஏற்­க­னவே 8 வானூர்­தி­கள் ஈரா­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு தற்­போது அந்த நாட்­டின் உள்­நாட்டு போக்­கு­வ­ரத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. நேற்­று­முன்­தி­னம் மேலும் ஐந்து வானூர்­தி­களை ஈரான் வாங்­கி­யது.

Show More

Related Articles

Close