இலங்கை அணியில் மீண்டும் மலிங்க?

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எமது அவதானிப்பில்தான் இருக்கிறார் என்று இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவாரா, இல்லையா என்பதை நான் தீர்மானிக்க முடியாது என்றும் அநேகமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் திலான் சமரவீர குறிப்பிட்டார்.
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அணியிலிருந்து கடந்த சில காலங்களாக ஓரம் கட்டப்பட்டே வருகிறார்.
ஆனாலும் அவரும் சளைக்காமல் தன் திறமைகளை உள்ளூர் போட்டிகளில் காட்டி வருகிறார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்துள்ள நிலையில் லசித் மலிங்க போன்ற அனுபவ வீரர்களின் அவசியம் இப்போதுதான் உணரப்பட்டிருக்கிறது.