எந்திரன் கதை என்னுடையது தான்: ஷங்கர் மனு

இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். இதில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடித்திருந்தனர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட, மனிதனை விட சக்தி வாய்ந்த இயந்திர மனிதனின் கதை. இந்த கதை என்னுடையது என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் நேரடியாக ஆஜராக வேண்டும்.

எதிர்தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஆகஸ்ட் 8ந் தேதிக்குள் நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய கதைக்கும், எதிர்மனுதாரார் ஆரூர் தமிழ்நாடன் சொல்லும் கதைக்கும் சம்பந்தம் இல்லை. நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இந்த வழக்கில் என் தரப்பில் சில முக்கியமான ஆவணங்களை இதுவரை தாக்கல் செய்யவில்லை. எந்திரன் படத்தின் கதையை முத்திரையிடப்பட்ட உரையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். படத்தின் கதையை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறேன். இந்த இரண்டு ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் ஷங்கர் குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் இது விசாரணைக்கு வருகிறது.

Show More
Close