Trending

வவுனியா சதொசவில் வாங்கிய சீனியில் யூரியா கலந்துள்ளதால் அதனை பயன்படுத்த வேண்டாம்

Story Highlights

  • 02 August விற்பனை செய்யப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
வவுனியா நகரத்தில் உள்ள சதொச விற்பனையகத்தில் விற்கப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று சீனியை கொள்வனவு  செய்த பொதுமக்கள் அந்த சீனியை பயன்படுத்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் பொது சுகாதார அதிகாரிகளால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சீனியில்,  யூரியா தவறுதலாகவே கலக்கப்பட்டதாக வவுனியா நகர பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வவுனியா நகர சதொச விற்பனையகத்தில் நேற்று கொள்வனவு செய்யப்பட்ட சீனியை உடனடியாக திரும்பக் கையளிக்குமாறும் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Source
Capital News
Tags
Show More

Related Articles

Close