சட்ட விரோதமாக பட்டங்களை விடுவோருக்கு எச்சரிக்கை

சட்ட விரோதமான முறையில் பட்டங்களை விடுவது தண்டனைக்குரிய குற்றம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு அருகாமையில் பட்டங்களை விடுவது சட்டவிரோதமானதுடன் தண்டனைக்கு உரியதாகும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளன.

விமானங்களில் பட்டங்கள் மோதுவதனால் விபத்துக்கள் ஏற்படும் என சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் ஜெனரல் எச்.எம்.சி. நிமல் ஸ்ரீ சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டங்களை விடுவதற்கான தங்குஸ் மற்றும் நைலோன் நூல்கள் போன்றவை விமானத்துடன் சிக்குண்டால் அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் அனைத்து விமான நிலையங்களுக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு உட்பட்ட வகையில் 300 ஆடி உயர பயன்படுத்த முடியாது.

இதனால் சிறுவர்கள், பட்டங்களை விடுவதில் ஆர்வம் கொண்டுள்ளவர்கள், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டங்களை விடுவதை தவிர்க்குமாறு சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Show More
Close