வைரலாகும் ரெஜினாவின் நடனம்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி என குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரெஜினா குறிகிய காலத்தில் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் ரெஜினா தனது Instagram பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் #inmyfeelingschallenge என்ற ஹாஷ்டாக் கொண்டு பலரும் விடீயோக்களை பதிவிட்டு வருகின்றனர். ஓடும் காரில் இருந்து இறங்கி அந்த காரின் வேகத்திலேயே முன்னோக்கி நகர்ந்துகொண்டே நடனம் ஆடவேண்டும். இதுவே அந்த வைரால்கும் சவால். வெளிநாட்டில் உள்ள பலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர். பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நிலையில் முதல் தென்னிந்திய நடிகையாக ரெஜினா நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்.

Show More

Related Articles

Close