சர்கார் சரவெடிக்கு ரெடி ஆகும் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சர்க்கார் திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பும் வரவேற்பும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி மற்றும் துப்பாக்கி படங்கள் தீபாவளி அன்று வெளியானதால் என்னவோ இந்த படமும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த வருட தீபாவளி நவம்பர் 6 செவ்வாய்க்கிழமை வருவதினால் சர்க்கார் செவ்வாய் அன்று ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகம் தான். சர்க்கார் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியது தான். கீர்த்தி சுரேஷ்  பைரவா படத்தை தொடர்ந்து  இரண்டாவது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் யோகிபாபு ராதா ரவி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான். சர்க்கார் பாடல்களை எழுதியுள்ளார் மெர்சல் பிரபலம் விவேக்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா விஜய் என்பது தான் தற்போது ரசிகர்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நலையில் ரசிகர்கள் ஏற்கனவே சமுக வலைதளங்களில் #சர்கார் சரவெடி இன் 100 டேஸ்# என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி பதிவுகளை வெளியிட தொடங்கிவிட்டன.

Show More

Related Articles

Close