இறுதிச் சுற்று இயக்குநருடன் இணையும் சூர்யா

மாதவன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படமான ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தற்போது சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார்.

சூர்யா – சுதா இணையும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாகவும், அதில் தான் பாடல் எழுதியுள்ளதாகவும் பாடலாசிரியர் விவேக் அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் என இரு படங்களில் தற்போது சூர்யா நடித்துவருகின்றார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Tags
Show More

Related Articles

Close