இலங்கை எதிர் தென்னாபிரிக்கா முதல் ODI இன்று

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென் ஆபிரிக்க அணி, இலங்கையுடன் முதலாவது ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ள இந்த போட்டியில், தென் ஆபிரிக்க அணியை டுபிளசிஸும், இலங்கை அணியை காயங்களின் பின்னர் மீண்டும் திரும்பிய அஞ்சலோ மெத்தியூஸும் வழிநடத்தவுள்ளனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பறியிருந்த நிலையில், சொந்த நாட்டில் நடைபெறும் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இதில் தென் ஆபிரிக்க அணியும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கையை சொந்த நாட்டில் வைத்து பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்க்கு முன்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆபிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என கைப்பற்றியிருந்தது.

அத்துடன் கடந்த ஆண்டு தமது சொந்த மண்ணில் வைத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரிலும் இலங்கை அணியை 5-0 என வைட் வொஷ் செய்திருந்தது. இந்நிலையில் இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்தவுள்ளது.

அதன் பிரகாரம் இலங்கை அணியில், அஞ்சலோ மெத்தியூஸ் (அணித்தலைவர்), தசுன் சானக்க, குசல் ஜனித பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகன், ஷெஹான் ஜயசூரிய இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆபிரிக்க அணியில், பாப் டுபிளசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, ஜூனியர் டல, குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி, ரீசா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளஸ்ஸன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வில்லியம் முல்டர், லுங்கி ன்கிடி, அன்டைல் பெஹ்லுக்வெயோ, ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இலங்கை ஆடுகளம் பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு குறிப்பாக சுழல் வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுனர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close