ஜப்பானில் சக்திவாய்ந்த சூறாவளி

ஜப்பான், டோக்கியோ அருகில் வீசிவரும் சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக அங்கு விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளி மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் வீசிவருவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

இதன்காரணமாக 100 இற்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜப்பானில் மழைவெள்ளம் காரணமாக மக்கள் உயிரிழப்புக்களை சந்தித்ததோடு தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகின்றது. இதனால் 80 இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று கடும் சூறாவளி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close