மிகவும் வியக்கத்தகு விளையாட்டு வீரர் எம்.எஸ். தோனி!!

இந்தியாவில் மிகவும் வியக்கத்தகு விளையாட்டு பிரபலங்களில் எம்.எஸ். தோனி முதலிடத்தில் உள்ளார்.

கேப்டன், விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக, எம்.எஸ். தோனி நம்மை மிகவும் கவர்ந்துள்ளார். உலக டி20, சாம்பியன்ஸ் ட்ராஃபி மற்றும் 50 ஓவர் உலக கோப்பை ஆகிய மூன்று ஐசிசி சாம்பியன் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை உட்பட பட சாதனைகளை தோனி படைத்துள்ளார். இந்திய அணி முதன்முதலாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு சென்றது இவரது கேப்டன்ஷிப்பில் தான்.

இத்தனை சாதனைகளுக்கும் பெருமைகளுக்கு சொந்தக்காரரான அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிய போகும் நேரம் நெருங்கி வரும் தருணத்திலும், ஜாம்பவன் சச்சின், கேப்டன் விராட் கோலியை காட்டிலும் மிகுந்த வியக்கத்தகு விளையாட்டு பிரபலமாக டாப்பில் இருப்பது தோனி தானாம்.

yougov.co.uk என்னும் இணையதளம், இந்தியாவில் மிகுந்த வியக்கத்தகு பிரபலங்கள் யார் என்ற கருத்துக்கணிப்பை எடுத்தது. அதில், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பட்டியலில், எம்.எஸ். தோனி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 6-வது இடத்தையும், விராட் கோலி 8-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், இந்தியாவில் அதிகம் வியக்கத்தகு பிரபலங்களாக உள்ளனர். ரொனால்டோக்கு 2.6 சதவீத ஓட்டுக்களும், மெஸ்ஸிக்கு 2 சதவீத ஓட்டுக்களும் கிடைத்துள்ளன. முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரரான டேவிட் பெக்கஹம், 1.6 சதவீத ஓட்டுக்களை பெற்று, இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக மிகுந்த வியக்கத்தகு பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ். தோனி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை பிரதமர் நரேந்திர மோடி பிடித்திருக்கிறார்.

Tags
Show More
Close