Trending

கருணாநிதியின் உடல்நிலை சீராகவுள்ளது – மருத்துவமனை அறிவிப்பு

கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை தேறிவருவதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அந்த மருத்துவமனை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கோபாலபுர இல்லத்திலிருந்து சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, இரத்த அழுத்த குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், மருத்துவமனை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Show More
Close