ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பு! அணித்தலைவராக மெத்தியூஸ்

தென் ஆபிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடர்பில், காயத்தில் இருந்து மீண்ட அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் செயற்படவுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள தென் ஆபிரிக்க அணியானது டெஸ்ட் போட்டிகளை இழந்துள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணியில்,

அஞ்சலோ மெத்தியூஸ், தசுன் சானக, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், திசேர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, பிரபாத் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகான், ஷியான் ஜெயசூரிய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான தலைவர் தினேஷ் சந்திமாலிற்கு, ICC போட்டித் தடை விதித்துள்ளதால் இந்த அணியில் அவர் இடம்பெறவில்லை. அத்தோடு, இந்த தொடரின் ஊடாக இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூரிய, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்.

இதுதவிர, அசேல குணரட்ன, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், ஷியான் மதுசங்க, வனிந்து ஹஸரங்கா ஆகியோர் உபாதையின் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

மேலும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவும் அணியில் இடம்பெறவில்லை. இவர்களது இழப்பு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 29 ஆம் திகதி தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close