வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணை..??

Image result for உள்ளூராட்சி சபைத் தேர்தல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிறைவுற்றாலும் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு சில காலம் ஆயிற்று
ஆட்சியமைப்பையும் யாரும் தனித்துவமாகச் செய்ய முடியாது போயிற்று.
ஆட்சியமைப்பில் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும் பிரிந்தும் மிகப்பெரிய நாடகம் நடந்ததை மக்கள் வெளிப்படையாகப் பார்த்தனர்.
தேர்தலுக்குப் பின்னர் இன்னொரு வாக்களிப்பு இடம்பெற்றதுதான் ஆச்சரியமான விடயம்.
அதாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வாக்களித்து உறுப்பினர்களைத் தெரிவு செய்தாலும் தேர்தலுக்குப் பின்னரும் ஒரு தேர்தல், தெரிவான உறுப்பினர்களிடையே நடை பெற்றது.
இங்குதான் அரசியல் கட்சிகள் இராஜதந்திர நகர்வுகளிலும் குள்ளத்தனங்களிலும் ஈடுபட்டனர்.
இவையயல்லாம் நடந்து ஒரு மாதிரியாக சபைகளில் ஆட்சியமைக்கப்பட்டது.
கன்னி அமர்வும் உறுப்பினர்களின் கன்னி யுரைகளும் நடந்தேறின.
குறைப்பிரசவத்துக் குழந்தையின் ஆரோக்கியத்தை – ஆயுளை நிர்ணயிக்கும் சாதகத்தை இப்போது எழுதிவிட முடியாது என்ற ளவில் அரசியல் அவதானிகள் இவற்றை யயல்லாம் மெளனமாக அவதானித்து வரு கின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, வடக்கு மாகா ணத்து உள்ளூராட்சி சபைகளைப் பொறுத்தவரை  பல சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துக் கொண்டது.
இதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா னந்தாவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இடம்பெற்றிருக்கக்கூடிய ரெலோவின் முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்காரணமாக உள்ளூராட்சி சபைக ளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப் பதற்கு ஈபிடிபி தனது ஆதரவை வெளிப்படையாக வழங்கியது.
யாழ்ப்பாண மாநகர சபையில் மட்டும் சட்டத் தரணி றெமீடியஸை போட்டியிட வைத்து அதனூடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிய மைப்பதற்கு ஈபிடிபியினர் வழிவகுத்தனர். இந்தச் சம்பவங்கள் நடந்து சில தினங்கள் கூட ஆகவில்லை.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் நாங் கள் பேசவில்லை. அவர்களின் ஆதரவைக் கோரவில்லை என்று தமிழரசுக் கட்சி மறுத் தான் விட்டது.
அடக்கடவுளே! ஆட்சியமைத்து கன்னிய மர்வு முடிந்த கையோடு, ஈபிடிபியுடன் நாங்கள் பேசவில்லை.
அவர்களிடம் ஆதரவு கேட்க வில்லை என்றால் சபைகளின் எதிர்காலம் எப்படியாகும் என்ற கேள்வி எழும்.
எது எப்படியாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எழுதாத ஒப்பந்தம் செய்து கொண்டே எங்கள் ஆதரவை அவர்களுக்கு வழங்கினோம் என்று ஈபிடிபியின் முக்கியஸ்தர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அதேநேரம் ரெலோவின் முக்கியஸ்தர் ஒரு வரும்; ஈபிடிபியுடன் கதைத்து கூட்டமைப்புக்கான அவர்களின் ஆதரவைக் கோரினோம் என்ற உண்மையைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுவே நிலைமை என்றால் பொய் கூறியது யார்? என்பதற்கு அப்பால், வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் அடுத்த நிகழ்ச்சி நிரல் நம்பிக்கையில்லாப் பிரேரணையாகத்தான் இருக்கப் போகிறது
Show More

Related Articles

Close