கட்சிக்குள் மாற்றங்கள் செய்து தனியாட்சிக்கு தயாராகும் UNP

கட்சிக்குள் மாற்றங்களை எற்படுத்தி தனியாட்சி அமைப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் மயந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் சிலருக்கும் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று காலை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூடி கட்சியின் எதிர்கால திட்டமிடல்கள் சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக மயந்த திசாநாயக்க கூறியுள்ளார்.

Show More

Related Articles

Close