மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும்;சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவிரைவில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சர்
சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், தற்போதைய அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி தனது ருவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தேர்தலில் மீண்டும் பலம்பொருந்தியவராகவும், ஸ்ரீலங்கா அரசியலில் அரவது மீள்வருகையும் சிறந்த அம்சமாக உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 19ஆவது அரசியலமைப்பிற்கு அமைய இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வெற்றிபெற்றவர், மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவோ, ஜனாதிபதியாகவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.