ஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்: எச்சரிக்கும் வட கொரியா

ஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்

ஐ சி பி எம் எனப்படும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை அண்மையில் சோதித்துள்ள வட கொரியா, அதன் வெற்றி குறித்து புகழ்பாடியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பும் வட கொரிய ஏவுகணைகளின் தாக்கும் தொலைவில்தான் இருக்கின்றன என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும், வட கொரியாவின் ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவை அல்ல என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியா அதன் முதல் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து மூன்று வாரங்கள் கழித்து தற்போது இந்த சமீபத்திய ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்: எச்சரிக்கும் கிம் ஜோங் உன்

வட கொரியாவில் வடபுறத்தில் உள்ள ஜகாங் மாகாணத்தில் உள்ள ஆயுத நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 23.41 மணிக்கு ஏவுகணை ஏவப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

தற்போது சோதிக்கப்பட்ட ஏவுகணை சுமார் 47 நிமிடங்களுக்கு மேலாக வானில் பறந்தததாகவும், 3,724 கி.மீ உயரம் வரை சென்றதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்க ஏவுகணை அமைப்புமுறை

இரவில் நேரத்தில் வட கொரியா ஏவுகணை ஒன்றை ஏவி சோதிப்பது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வாகும். அதன் நோக்கம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அண்டை நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க – தென் கொரியா

வட கொரிய அரசின் சமீபத்திய பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடவடிக்கைதான் இது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

 

BBC

Show More

Related Articles

Close