வடகொரியா மீது மேலதிக தடைகள் வேண்டும்: தென்கொரிய ஜனாதிபதி

வெற்றிகரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா மீது, மேலதிக தடைகளை விதிப்பதே சிறந்தது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகொரியாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்தலும் குறித்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவால் நேற்று நள்ளிரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை ஒன்று நடத்தப்பட்டது. அமெரிக்காவை தாக்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியாகவே குறித்த ஏவுகணைச் சோதனை கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close