முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் நகுலன் உள்ளிட்ட மூவர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுதுறை உறுப்பினர் சுப்ரமணியம் நகுலன் உள்ளிட்ட மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை விமான தபால் மூலம் லண்டனுக்கு அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டில் இருந்து சந்தேகநபர்கள் மூவரையும் விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.  இதனைக் கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், சுப்ரமணியம் நகுலன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Show More

Related Articles

Close