எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக மீனவருக்கு 20 கோடி அபராதம்- இலங்கை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தா ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட இருமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தாலும், எல்லைத் தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தாலும், தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையின் கடற்தொழில் சட்டத் திருத்த மசோதாவை, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Show More

Related Articles

Close