தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, விக்னேஸ்வரனை சந்தித்தார்.

இலங்கைக்கு சென்றுள்ள இந்தியாவின் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனாதாக் கட்சியின் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வடமாகாண மகளீர் விவகாரம் சமூகசேவைகள் புனர்நிர்மான அமைச்சர் அனந்தி சசிதரனும் சிவாஜிலிங்க்கமும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நேற்று தமிழிசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.

நாளை இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தமிழிசையின் இலங்கை பயணம் தனிப்பட்ட முறையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Close