அருணாச்சலத்தில் காணாமல் போன ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான விமானப்படை ஹெலிகொப்டர் பாகங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அருணாசலப்பிரசேத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பணியில்  ஈடுபட்டிருந்த போது  எம்.ஐ-17 என்ற ஹெலிகொப்டர் நேற்று திடீரென காணாமல் போயிருந்தது.

3 வீரர்களுடன் சென்ற இலகுரக ஹெலி கொப்டர், பாபம் பரே மாவட்டம் சாகலி அருகே சென்றபோது கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த ஹெலிகொப்டர் இன்று அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவிரமான தேடுதல் பணிக்கு பிறகு யுபியா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஹெலிகாப்டர் நொருங்கி கிடக்கும் நிலையில், அதில் பயணம் செய்த விமானி உட்பட 4 பேரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கருதப்படுகின்றது.

 

Show More

Related Articles

Close