யாழில் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான மூதாட்டியை கொன்று புதைத்தவருக்கு மரண தண்டனை

ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் – மார்ட்டின் வீதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டு வளவிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.

2008 ஆண்டு டிசம்பர் மாதம், வயோதிபப் பெண்ணான லில்லி மேரி என்பவர் படுகொலை செய்யப்பட்டமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியின் மனைவி மூன்று மாதங்களின் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

இதற்கமைய, 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி நீதவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின்போது குற்றவாளியான தனது கணவருக்கு எதிராக அவரது மனைவியே பொலிஸாருக்கு முதலில் தகவல்களை வழங்கியிருந்தார்.

வழக்கு விசாரணை நிறைவில், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

குற்றவாளியும் அவரது மனைவியும் கொலையுண்ட லில்லி மேரியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close