மீண்டுமொரு சைபர் தாக்குதல்- கலக்கத்தில் உலக நாடுகள்!

உலகிலுள்ள பிரதான நிறுவனங்கள் பலவற்றை இலக்கு வைத்து மீண்டும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் கப்பமாக பணம் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சமமான ஒன்றே மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, உக்ரைன், ரஷ்யா, டென்மார்க், ஸ்பெய்ன், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதான நிறுவனங்களின் கணினி கட்டமைப்பை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உக்ரைன் அரச நிறுவனம், கிவ் விமான நிலையம், உக்ரைன் மத்திய வங்கி, என்டநோவ் விமான தயாரிப்பு நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனம் மற்றும் டென்மார்க் கடற்படை நிறுவனங்களும் இதில் அடங்கும்.

இந்த சைபர் தாக்குதல் எந்த நாட்டில் இருந்து எந்த நபரால் அல்லது குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதென இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந் தாக்குதலினால் வின்டோஸ் கணினி கட்டமைப்பின் நடவடிக்கை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல நாடுகளை முடக்கி போட்ட சைபர் தாக்குதல், வடகொரியாவிலிருந்து செயற்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Close