மனிதர்கள் கவனிப்பதால் வேட்டை உத்தியை மாற்றும் சிம்பன்ஸி குரங்குகள்!

மனிதர்கள்தங்களைக் கவனிப்பதால், உகாண்டாவில் உள்ள சிம்பன்சி குரங்குகள், தங்களது வேட்டையாடும் உத்தியை மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிம்பான்சி குரங்கு

சிம்பன்சி குரங்குகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, நெருங்கிய சிம்பன்சி இனங்களுக்கு இடையில் மிகவும் வித்தியாசமான வேட்டையாடும் பழக்கம் இருந்ததை விஞ்ஞானிகள் ஆவணப்படுத்தினர்.

கொலோபஸ்(colobus) குரங்களுக்குகாக, ”சொன்சோ”(Sonso) குரங்குகள் சிறிய குழுக்களில் வேட்டையாடுகின்றன. அதேநேரத்தில், ”வைபிரா”(Waibira) குழுவில் உள்ள குரங்குகள் தனியாக வேட்டையாடுகின்றன. தங்கள் கையில் கிடைப்பதை எடுத்துக்கொள்கின்றன.

ஓர் இடத்தில் மனிதர்களின் இருப்புக்கு, சிம்பன்சி குரங்கு சமூகம் எந்த விதத்தில் உணர்ச்சிவயப்படுகின்றன என்பதை இந்த ஆய்வு காட்டுகின்றது.

இந்த ஆய்வு முடிவுகள் பிஎல்ஒஎஸ் ஒன்( PLoS One) என்ற ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகள் இந்த விலங்குகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஆய்வு வேலைகள் இந்த சிம்பன்சி குரங்குகள் குழுக்களாக வேட்டையாடுவதை சிரமப்படுத்தியிருக்கலாம். குழுவாக வேட்டையாடுவதில் கொலோபஸ் குரங்களை துரத்துவது மற்றும் பிடிப்பது போன்றவை மிகவும் முக்கியம் என்று தெரிகிறது.

சிம்பான்சி குரங்கு

புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முன்னணி ஆய்வாளர் கேத்தரின் ஹோபெட்டர் ‘வைபீரா’ குழுவின் வேட்டையாடும் முறை ‘சந்தர்ப்பவாத’ தந்திரந்தை அதிகம் பயன்படுத்துவதாக மாறியிருக்கலாம்.

இந்த சிம்பன்சி குரங்குகள் விஞ்ஞானிகளின் இருப்புக்கு மிகவும் குறைந்த அளவில் பழக்கப்பட்டிருப்பதுதான் காரணம் என்கிறார்.

உகாண்டாவின் புடோங்கோ காட்டில் இருந்து பிபிசியிடம் தொடர்புகொண்டு பேசிய ஹோபெட்டர், ‘சொன்சோ’ மற்றும் ‘வைபீரா’ குழுக்களை சேர்ந்த சிம்பன்சிகள் ”பிராந்திய எல்லைகளை பகிர்கின்றன” அதனால் இவைகளின் உணவு மற்றும் இரை ஒரே மாதிரியானவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறுகிறார். ஹோபெட்டர் புடோங்கோ காட்டில் இந்த இரண்டு குரங்கு குழுக்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

சிம்பான்சி குரங்கு

”தாங்கள் வசிக்கும் காடுகளில் மனிதர்கள் தங்களை பின்தொடர்வதால், அவர்கள் எவ்வாறு தங்களது இயல்பில் மாறுகின்றனர் என்பதுதான் தற்போது இந்த இரண்டு குழுக்களை சேர்ந்த குரங்குகளிடம் காணப்படும் வித்தியசாத்தின் முக்கிய அம்சம்,” என்கிறார் ஹோபெட்டர்.

”சென்சோ குழுவை சேர்ந்த தற்போது வளர்ந்த நிலையில் உள்ள குரங்குகளின் சந்ததிகள் நாங்கள் காடுகளில் அவர்களுடன் இருந்த சமயத்தில் பிறந்தவை. அதனால் எங்களின் இருப்பு அவர்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்று,” என்றார்.

ஆனால் இளம் வைபிரா வகை குரங்குகள் எங்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆனால் நாங்கள் ஆய்வை தொடங்கிய சமயத்தில், சில வளர்ந்த குரங்குகள், 30 முதல் 40 வயது வரை உள்ளவை, நாங்கள் ஐந்து ஆண்டுகள் அவற்றை பின்தொடர்வது என்பது அவற்றின் வாழ்க்கையில் மிகவும் குறுகிய காலம்,” என்றார் ஹோபெட்டர்.

”நம்முடன் பழகுவதற்கு சிம்பன்சி குரங்குகள் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்,” என்றார் அவர்.

பிற இடங்களில், காடுகளில் உள்ள சிம்பன்சி குரங்கு குழுக்கள் வசிப்பிடத்தில் இருப்பது மற்றும் அவற்றை கூர்மையாக கவனிப்பது போன்ற ஆய்வு நடைபெறும்இடங்களிலும் இந்த பாங்கு வெளிப்பட்டது என்கிறார்.

”சிம்பன்சி குரங்குகள் மிகவும் பலதரப்பட்ட இனங்களை வேட்டையாடுகின்றன. பின்னர் அவை தங்களது தேர்வை மாற்றி, கொலோபஸ் குரங்குகளை வேட்டையாடுகின்றன,” என்றார்.

இதற்கு முக்கிய காரணம், தங்களுடைய எல்லை மற்றும் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சிம்பன்சிகுழுக்களின் இயல்பான போக்கு என்கிறார்.

”தங்களுடைய வாழ்க்கையில் மனிதர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது இந்த குரங்குகளுக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்,”என்றார் ஆய்வாளர் ஹோபெட்டர்.

”காட்டில் உள்ள சிம்பன்சி குரங்குகளைப்பற்றி நீண்ட நாட்கள் ஆய்வு செய்வது உண்மையாக பாதுகாப்பு நலன்களை அளித்தாலும், நம் இருப்பு அந்த குரங்குகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்,” என்றார்.

சிம்பன்சி குரங்கு

அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் மற்றும் அவை வாழும் காடுகளை பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியம். அதேநேரம் , அந்த குரங்குகளை நேரடியாக பார்த்து அவற்றின் நடத்தையை உற்றுநோக்கி தெரிந்துகொள்வதுதான் மனித மொழி மற்றும் சமூக அமைப்பை புரிந்துகொள்வதற்கு சிறந்த வழியாகும்,” என்கிறார் ஹோபெட்டர்.

”ஆனால் நாம் அங்கு சென்று அந்த குரங்குகளை பின்தொடரவேண்டுமா என்று யோசிக்கவேண்டும்,” என்கிறார்.

”கேமரா பொறிகள், தொலைவில் வைக்கப்படும் ஒலிவாங்கிகள் மற்றும் ட்ரோன் ஆகியவற்றை கொண்டு சிறந்த தரத்தில் தேவையான தகவல்களை நாம் எடுக்கமுடியும். ,” என்றார் ஹோபெட்டர்.

 

BBC

Related Articles

Back to top button