சுமுகமாக சபை இயங்க அனைவரும் உதவுங்கள் பொது அமைப்புகள் கோரிக்கை

வடக்கு மாகாண அரசு எதிர்காலத்தில் எதுவித குழப்பமுமின்றி மிகச் சிறப்பாக இயங்கி மக்களுக்கு உச்சமான சேவையை வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததையடுத்து வடக்கு மாகாணத்தில் அரசில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மதத் தலைவர்கள் இது விடயத்தில் தலையிட்டு ஒரு சுமுகமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நடந்த சம்பவங்களில் இருந்து கற்றறிந்து மக்களுக்கு உச்ச சேவையை வழங்க வடக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள பொது அமைப்புக்கள்,
வடக்கு மாகாண சபையின் திறமையான இயங்கு நிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் ஊடகங்களும் பொதுமக்களும் தமது காத்திரமான வகிபங்கை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளன.
இதேவேளை வடக்கு மாகாண அரசிலில் ஏற்பட்டிருந்த குழப்பநிலைகள் தணிந்து ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில்,நாளை வடக்கு மாகாண சபை கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் வடக்கு மாகாண சபை கூடும் போது, உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயற்படுவர் என நம்புவதாகவும் பொது அமைப்புக்கள் விடுத்துள்ள  கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.
Show More

Related Articles

Close