யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு

யாழ்ப்பாணத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தின் சில அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோரியுள்ளதாக அரசியல் சாசன திருத்தங்கள் குறித்த மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் குறித்த பரிந்துரைகள் கோரப்பட்ட போது ஜாதிய அடிப்படையிலான விடயங்கள் பகிரங்கமாக பேசப்பட்ட ஒரே மாகாணம் வடக்கு மாகாணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இன ஒடுக்குமுறைகள் காணப்படுவதாகவும் இதனால் இவ்வாறு ஒதுக்கீடு செய்பய்பட வேண்டுமெனவும் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி  கோரியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக அடிப்படையிலான பிரச்சினைகள் முரண்பாடுகள் காணப்படுவதாக பலர் குறிப்பிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Close