ஐபோனில் Best Photoes எடுப்பது எப்படி?

சிறந்த கேமராக்கள் கொண்ட போன்கள் என ஒரு லிஸ்ட் போட்டால், நிச்சயம் அதில் ஐபோன்கள் தவறாமல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட ஐபோன் சீரிஸின் லேட்டஸ்ட் எடிஷன் கடந்த வருடம் ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள். இந்த போன்களின் கேமராக்களும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களையே குவித்தன. இந்நிலையில் தனது பயனாளர்களின் போட்டோக்களுக்கு அழகூட்டுவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது ஆப்பிள். ஐபோன் 7-ஐக் கொண்டு எப்படி சிறந்த போட்டோக்கள் எடுப்பது எனக் கற்றுக்கொடுப்பதற்காக டுட்டோரியல் வீடியோக்களை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது ஆப்பிள்.

நீளமான உரையாடல்கள், டெக்னிக்கல் விளக்கங்கள், போனின் சிறப்பம்சங்கள் என வழக்கமான டுட்டோரியல் வீடியோக்கள் போல இல்லாமல், எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் இவற்றை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். எதையும் சுருக்கமாக சொல்லிமுடிக்கும், தற்போதைய ட்ரெண்ட்டிற்கு ஏற்ப 40 விநாடிகளுக்காகவே அனைத்து வீடியோக்களும் அடங்கி விடுகின்றன. www.apple.com/iphone/photography-how-to/ என்ற தளத்தில் இந்த வீடியோக்களைக் காணலாம்.

போர்ட்ரைட் போட்டோக்கள், குளோஸ் அப் ஷாட்கள், ஃபிளாஷ் இல்லாத புகைப்படங்கள், ஆக்ஷன் படங்கள், வீடியோ ஷூட் செய்யும் போது போட்டோ எடுப்பது, ஸ்ட்ரீட் லைட் போட்டோக்கள், நிழல் படங்கள், வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் போன்றவற்றை எப்படி எளிமையாக ஐபோன் 7 கொண்டு எடுப்பது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன இந்த வீடியோக்கள். இப்படி மொத்தம் 16 வீடியோக்கள் ஆப்பிளின் தளத்தில் இருக்கிறது. இதில் ஐந்து வீடியோக்களை மட்டும் யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளது. மற்றவரை ஆப்பிளின் இணையதளத்தில்தான் பார்க்க வேண்டும். சிறந்த மொபைல் போன் போட்டோகிராபிக்காக ஏராளமான டுட்டோரியல் வீடியோக்கள், டிப்ஸ்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் போல இல்லாமல் என்ன போட்டோ, எந்த ஆப்ஷன்கள், எப்படி எடுப்பது என எளிமையான ஆப்ஷன்களால் 40 நொடிகளுக்குள் கற்றுத் தருகிறது ஆப்பிள். இதுதான் இதன் ப்ளஸ். இன்னும் கூடுதலான வீடியோக்களை வருங்காலங்களில் ஆப்பிள் அப்டேட்டலாம்.

ஐபோன் கேமராக்களுக்கு என சொல்லாமல், குறிப்பாக ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்களுக்கு மட்டுமே டுட்டோரியல் வீடியோக்களைக் கொடுத்துள்ளது ஆப்பிள்.  4.7 இன்ச் டிஸ்ப்ளே, A10 சிப், 12 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 7 மெகா பிக்ஸல் ஃபேஸ்டைம் கேமரா ஆகியவற்றைக் கொண்டது ஐபோன் 7. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற போட்டோக்களை மையமாகக் கொண்ட சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின்னர் மொபைல் போட்டோகிராபியை விரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் செல்ஃபி எக்ஸ்பர்ட் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு ஹைஃபை கொடுத்துள்ளது ஆப்பிள்.

வெர்ட்டிக்கல் பனோரமா வீடியோ

ஆக்ஷன் போட்டோக்கள்

ஃபிளாஷ் இல்லாமல் சிறந்த போட்டோ

குளோஸ் அப் ஷாட்

சிறந்த போர்ட்ரைட்

Show More

Related Articles

Close