அன்னையர் தினத்தில், அம்மாவிற்கு கோயில் திறக்கும் ராகவா லாரன்ஸ்..!

நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன் நாளை திறந்து வைக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், ஶ்ரீராகவேந்திரா கடவுளின் மீது தீவிர பற்றுக் கொண்டார். எனவே அவர் தனது சொந்தச் செலவில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ளது. தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தன் அன்னையின் கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார். அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் அந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான நாளை திறக்க உள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இந்த சிலையை காலை 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மேலும் சில முக்கிய திரை பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.

Show More

Related Articles

Close