நாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

நாட்டை பிளவடையச் செய்யாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போது நாடு பிளவுபடுத்தப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அதிகளவான மக்கள் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அது தொடர்பில் எவரும் வாதப் பிரதிவாதங்கள் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பிரதமர்  நாட்டை பிளவுபடுத்துமாறு எவரும் கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Close