கிழக்கில் பேரெழுச்சியுடன் எழுக தமிழ்

இன்றுகாலை 10/2/2017 மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் எழுக தமிழ்‍- கிழக்கு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  ஆரம்பமாகியுள்ளது.
சற்றுமுன்னர் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 

வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்று வருகின்றது. பேரணி விபுலானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தவுடன், நண்பகல் 12 மணியளவில் எழுக தமிழ் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆற்றவிருக்கின்றனர்.

Show More

Related Articles

Close