கொட்டும் மழையிலும் உண்ணாவிரதத்துக்கு வலுச்சேர்க்க‌ திரண்ட இளைஞர்கள்..

தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி சாகும் வரை நான்காவது நாளாக வவுனியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரில் இன்று மாலை இளைஞர்கள் ஒன்றுகூடி தமது ஆதரவினை தெரிவிக்கின்றனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தமது ஆதரவினை காணாமல் போனோர் பற்றிய தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தக்கோரி பதாதைகளை தாங்கியவாறு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ச்மூக வலைத்தளங்களூடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Close