கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி இன்று பகல் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிருவாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிருவாக கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.

விடுதி வசதியுடள் மீண்டும் விரிவுரை ஆரம்பிக்க கோரி இன்று பகல் நிருவாக கட்டிடத் தொகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் வந்தாறுமூலை பிரதான வாயிலை சென்றடைந்து   தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள்.

இதேவேளை பல்கலைகக்ழகத்தின் மாணவர்கள் 10 பேர் இன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு நாளை (24) நீதிமன்றத்துக்கு அஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

Show More

Related Articles

Close