புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி

‘தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது’ என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப் பான பேச்சு, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு,கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தன், அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக, ரஜினியின் பேச்சு அமைந்துள்ளதால், அவரது
ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புதுக்கட்சியை துவக்குவதற்குரிய ஆலோசனை பெற, அரசியல் வி.ஐ.பி.,க்களை சந்திக்க, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
ரசிகர்கள் வேண்டுகோள்

ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள, அவரது ரசிகர்கள் வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். தன் அரசியல் பயணம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே

தியாகராஜன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட, மூத்த பத்திரிகையாளர்களிடம், ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

தி.மு.க., செயல் தலைவராக ஸ்டாலின் தேர்ந் தெடுக்கப்பட்ட பின், அவருக்கு தொலைபேசியில் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலாவை தேர்ந்தெடுத்தபின், அவருக்கு ரஜினி வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும், ஜெயலலிதா வின் மரணம் தொடர்பாக, பொதுமக்களிடம் எழுந்துள்ள சில சந்தேகங்கள் பற்றியும், தனக்கு நெருக்கமான அரசியல் விமர்சகர்களிடமும் ரஜினி விவாதித்துள்ளார்.

‘துக்ளக்’ ஆண்டு விழா, மறைந்த பத்திரிகையாளர், சோ ராமசாமியின் உருவப்பட திறப்பு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி பேசுகையில், ‘தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது’ என்றார்.

அதாவது, ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை, சசிகலா ஏற்றுக் கொண்டதை தமிழக மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் விரும்பவில்லை என்பதை, மறை முகமாக ரஜினி சுட்டிகாட்டியுள்ளார். ரஜினியின் பரபரப்பான பேச்சு, சசிகலா தரப்பின ருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதே சமயம், அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், ‘பீட்டா’ அமைப்புக்கு ஆதரவாக வும், நடிகர் விஷால், நடிகை த்ரிஷா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடு

 விதியுங்கள்; ஆனால், தடை விதிக்கக் கூடாது. பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாசாரத் தில் மட்டும் எப்பொழுதும் கைவைக்கக் கூடாது; அதை காப்பாற்ற வேண்டும்; ஜல்லிக் கட்டு நடத்த வேண்டும்’ என, நேற்று முன் தினம் ரஜினி கொடுத்த வாய்ஸ், பொது மக்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வி.ஐ.பி.,க்களுடன் சந்திப்பு

எம்.ஜி.ஆர், – ஜெயலலிதா தலைமையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர், ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட அரசியல், வி.ஐ.பி.,க் களை சந்தித்து, புதுக்கட்சியை துவக்குவதற்கான ஆலோசனை பெறுவதற்கு, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவருக்கு நெருக்கமான ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Show More

Related Articles

Close