மைதானத்திலிருந்து அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம்

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் சௌத்தி வீசிய பந்தொன்று பங்களாதேஷ் அணி வீரர் முஷ்பிகுர் ரஹீமின் தலையை பதம் பார்த்ததில் மைதானத்திலிருந்து அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப் போட்டியின்  2 ஆவது இன்னிங்ஷில் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹீம் சௌத்தி வீசிய எகிறும் முறையான பந்தை எதிர்கொள்ள முயன்றபோதே பந்து அவரது தலையை பதம் பார்த்துள்ளது.

Show More

Related Articles

Close