யூரோ கிண்ணம் 2016 ஒரு பார்வை

sangunatham euro cup copyரோப்பிய நாடுகளின் காற்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் என அழைக்கப்படும் யூரோ கிண்ணம், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பிக்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டித் தொடர் இவ்வாண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டித் தொடர், ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில், தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிக்கு நேரடியான தகுதி கிடைத்த நிலையில், தகுதி பெற போட்டியிட்ட 53 அணிகளிலிருந்து 23 அணிகள் தகுதி பெற்று, மொத்தமாக 24 அணிகள் விளையாடவுள்ளன. இந்த 24 அணிகளும் 4 அணிகள் கொண்ட 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதிபெறும்.

மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகளில் 4 அணிகளுக்கும், அச்சுற்றுக்குத் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலிறுதிப் போட்டிகள் இடம்பெற்று, ஜூலை 6ம் 7ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும். இறுதிப் போட்டி, ஜூலை 10ம் திகதி இடம்பெறும். நடப்புச் சம்பியனாக ஸ்பெயின் உள்ள அதே நேரம் அதிக தடவை சம்பியனாக(3) ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

களமிறங்கும் அணிகள்:

அல்பேனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, செக் குடியரசு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, வட அயர்லாந்து , போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்துக் குடியரசு, ரோமானியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், வேல்ஸ்

 

Show More

Related Articles

Leave a Reply

Close