சாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

ஜனநாயக போராளிகள் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.  சாவகச்சேரி டச்சு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இனியவன் எனும் புனைபெயரில் அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் (வயது 35) எனும் நபரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.

சாவகச்சேரியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.