ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரானார் பாண்டிங்!

ஆஸ்திரேலிய அணியின் ஆஸ்தான கேப்டனான ரிக்கி பாண்டிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான, 20 ஓவர் போட்டி தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பயிற்சியாளர்களாக உள்ள ஜஸ்டின் லாங்கர், ஜேஸன் கில்லஸ்பி ஆகியோரோடு இணைந்து பணியாற்ற உள்ளார் பாண்டிங். இந்த இணை சர்வதேச கிரிக்கெட்டில் பல வெற்றிகளை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்றுத் தந்துள்ளதால் பயிற்சியாளர்களாகவும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இலங்கைக்கு எதிரான தொடர் பிப்ரவரியில் நடக்கிறது.