ஆட்சி கவிழ்ப்பிற்கோ அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை

ஆட்சி கவிழ்ப்பிற்கோ  அல்லது அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டாலும், ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி  அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.