ரூ.1000 கோடியில் கட்டப்பட்ட சீனாவில் மிக உயரமான பாலம் திறப்பு

சீனாவின் போக்குவரத்து நெரிசல், உலகப்பிரசித்திப் பெற்றது. இதனால் அங்கு காற்று மாசு மிக அதிகம். இதை தவிர்க்க அங்கு பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பாலம் கட்டுமானத்தில் சீன புதிய சாதனையை செய்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது.

சுமார் 1,341 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய மேம்பாலம் ‘சிய் டு’ என்ற ஆற்றுக்கு மேலே தரைமட்டத்தில் இருந்து 1,854 அடி உயரத்தில் இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.  இதன் மூலம், யுனான் மற்றும் குயிஸ்கு என்ற 2 மாகாணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் மூலம் இரு மாகாணங்களுக்கு இடையிலான பயண தூரம் 4 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. உலகிலேயே  உயரமானதாக கருதப்படும் இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க சுமார் ரூ.1000 கோடியை சீன அரசு செலவு செய்துள்ளது.