72 மணிநேரத்தில் வெளியேறுங்கள்: ஒபாமா உத்தரவு

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் இமெயில்களை ஹேக் செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ரஷ்ய அதிபர் புதின் சம்மதத்துடன்தான் அந்நாட்டு உளவுத்துறை மேற்கொண்டுள்ளது என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களது குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது. இது போன்று ரஷ்யா மீது தொடர் நடவடிக்கை  மேற்கொள்ள அதிபர் ஒபாமா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.