மகர ராசியினருக்கு 2017 ஆங்கில புத்தாண்டு எப்படி?

மகர ராசிக்காரர்களே!

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செல்வச் செழிப்பு மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார்.

தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் வருவது செலவினங்கள் அதிகரிக்கச் செய்யும். இவ்வாண்டு இறுதியில் நடைபெறும்.

ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஏழாமிடத்திற்கு வருவது வியாபார விருத்தியை கொடுக்கும் கேது உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது உழைப்பை அதிகப்படுத்தும்.

ஜனவரி – வேலை கிடைக்கும்

ஆண்டின் துவக்கத்தில் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கும் சூரியன் அதிகமாக செலவழிக்கும் சூழ்நிலையை உருவாக்குவார் இம்மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு சூரியன் வருகிறார் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது வியாபாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவு நிலவும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்திலிருப்பது தாராளமான செல்வத்தை கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி மூன்றாமிடத்திற்கு மாறுகிறார் வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். சனி வருட ஆரம்பத்தில் பதினொன்றாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது செலவுகள் அதிகரிக்கும் ராகு எட்டாமிடத்தில் இருப்பது மனதில் முடிவெடுக்க முடியாத நிலையை உண்டாக்கும் கேது இரண்டாமிடத்திலிருப்பது அடிக்கடி தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது.

பிப்ரவரி – வருமானம் அதிகரிக்கும்

சூரியன் இம்மாதம் 13ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். புதன் இம்மாதம்03ம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருவது வருவது சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள் 22ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச் – கவனம் அதிகரிப்பு

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி பயணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் 11ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது வியாபாரம் சிறப்படையும் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல் – வாகனம் வாங்குவீர்கள்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே – உல்லாச பயணம்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாங்கும் யோகம் உண்டாகும்.
இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன் – அதிகாரிகளால் தொல்லை

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 18ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் கருத்து வேற்றுமை உண்டாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை – வாழ்க்கை துணையால் தொல்லை

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரத்தில் சிறந்த நிலை உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஏழாம் இடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும் 21ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையினால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட் – மனதில் கலக்கம்

சூரியன் 17ம் தேதி உங்கள் எட்டாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகரிகளால் மனதில் கலக்கம் உண்டாகும் செவ்வாய் 27ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகன விபத்து உண்டாகலாம். சுக்கிரன் 21ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை நீங்கி வியாபாரம் விருத்தியாகும் கேது 18ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் மன சிந்தனை தெளிவடையும். இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர் – தொழிலில் மேன்மை

சூரியன் 17ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் அறிவுரை நன்மையைக் கொடுக்கும். செவ்வாய் 13ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் புதன் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் வெளிநாட்டு தொழில் தொடர்பு சிறப்பு அடையும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழில் நிலை மேன்மையடையும். சுக்கிரன் 15ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை.
இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர் – பதவி உயர்வு

சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் செவ்வாய் 30ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதன் 30ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சுக்கிரன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர் – திடீர் வருமானம்

சூரியன் 17ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் திடீர் வருமானம் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமன் உதவி கிடைக்கும் 24ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுக்கிரன் 03ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் 26ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர் – வீண் அலைச்சல்

சூரியன் 16ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் அலைச்சல் உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

Show More

Related Articles

Close