“முழு நீள நடிகனாக முதல் வருடம்..!” ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி முழு நீள நடிகனாக தனது முதல் வருடத்தை நிறைவு செய்துள்ளார். அதற்காக அவர் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நானும் ரௌடி தான்’ படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் தான் தன்னால் அடுத்தடுத்த பல படங்கள் நடிக்க முடிந்ததாகவும், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு, சந்தோஷ் சிவன், ரவி வர்மன், பிரபுதேவா என பல நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ரேடியோ மற்றும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி கூறியுள்ளார். மேலும் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Close