அடுத்த ஐபோனில் Dual Sim

ஆப்பிள் ‘ஐபோன் 7’ போன்களில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த ஆண்டு வெளியான ஐபோனில் டூயல் சிம் வசதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன்களில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
டூயல் சிம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மொபைல் சாதனத்தில் இரு வேறு ஆன்டெனாக்களை இயக்குவதற்கான உரிமத்தை அமெரிக்க காப்புரிமை அலுவலகம் ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. இதனால் இனிவரும் ஐபோனில் இரண்டு சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்படுவது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
டூயல் சிம் கார்டுகளில் ஒன்றிற்கு வாய்ஸ் கால் மற்றொன்றிற்கு இண்டர்நெட் டேட்டா என முக்கியத்துவம் வழங்கப்படும் என்றே தெரிகிறது. இத்துடன் இரண்டு ஸ்லாட்களிலும் 4G எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும். ஐபோன் 8’இல் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுமா என்பது தற்சமயம் வரை உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருக்கின்றது.
அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோனில் OLED வகை டிஸ்ப்ளே, ஹோம் பட்டன் நீக்கம் மற்றும் வளைந்த கிளாஸ் வடிவமைப்பு உள்ளிட்டவை இடம்பெறும் என தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Show More

Related Articles

Close