ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து யாழில் குடும்பமொன்று உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னாள் கொக்குவிலை சேர்ந்த குடும்பத்தினர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றுத் திறனாளியான குறித்த பெண்ணுக்குரிய காணியிற்கு இன்னொருவர் உரிமை கூறிவரும் நிலையில் அவரினால் போலியான உறுதியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பல அடாத்து வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எனவே தமது காணி இலக்கமான 41808 இற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும், தமக்கான தீர்வைப் பெற்றுத்தரும்வரைக்கும் தாம் இவ்விடத்தைவிட்டு அகலப்போவதில்லையெனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Close