ஐ.நா சபைக்கு புதிய பொதுச் செயலாளர்

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டானியோ கட்டர்ஸ் ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக செயல்பட உள்ளார். 71 வயதாகும் ஆன்டோனியோ போர்ச்சுகலுக்கு 1995-2002 வரை பிரதமராக இருந்துள்ளார். அதே போல, 2005-2015 வரை ஐ.நா-வின் அகதிகளுக்கான உயர் ஆணையராகவும் பதவி வகித்தார். தற்போதைய ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைகிறது. அதன்பின், ஜனவரி 1 முதல் அவர் ஐ.நா பொதுச் செயலாளராக செயல்படுவார்.

பதவியேற்ற பின் ஆன்டோனியோ, ‘ஐ.நா சபை மிக ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நடைமுறைகளில் நேரம் செலவழிப்பதை விடுத்து அதிக செயல்பாடுகளில் இறங்க வேண்டும். சில நாடுகளில் நிச்சயமற்ற தன்மை, கலவரங்களும், சச்சரவுகளும் நிலவி வருகிறது. அரசு எதைக் கூறினாலும், அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். பலர் அவர்கள் அரசு மீது மட்டுமல்ல, சர்வதேச அமைப்புகள் மீதும் கூட நம்பிக்கையை இழந்துள்ளனர். ஐ.நா-வுக்கும் இது பொருந்தும்.’ என்று பேசியுள்ளார்.

Show More

Related Articles

Close