ஞானசார தேரருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்- மைத்திரி

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பேச்சுவார்த்தையின் மூலம் நல்லிணக்க வழிமுறைக்கு கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்களுடனான நல்லிணக்கச் சந்திப்பின்போது அவரை அழைத்ததாகவும் நல்லிணக்கத்திற்கு ஒத்துழைக்காத வகையில் செயற்படுவாராயின் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் பின் நிற்கப் போவதில்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத செய்பாடுகளுக்காக ஞானசாரர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில், நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இதற்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் சந்திப்பினபோது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதியிடம் கடிதமொன்றும் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், எம்.எச்.ஹரீஸ், பைஸர் முஸ்தபா மற்றும் முஸ்லிம் இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Show More

Related Articles

Close