நைஜீரிய தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து: 60 பேர் பலி

நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் உயொ நகரில், தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் என அதிபர் முகமது புகாரி தெரிவித்துள்ளார்.

அதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர்

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ரெய்க்நெர் பைபிள் தேவாலயத்தை நிறுவியவரான அகான் வீக்ஸை, பேராயராக நியமிக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் கலந்து கொண்ட போது அந்த விபத்து நேரிட்டது.

அந்த தேவாலயத்தின் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது. ஆக்வா ஈபூம் மாநிலத்தின் ஆளுநரும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆனால் உயிர் தப்பியவருமான ஊடும் இம்மானுவேல், பாதுகாப்பு நடைமுறைகளில் சமரசம் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Close