யாழில் விஷேட காவல்துறை அதிரடிப்படையினர் ரோந்து

யாழில் விஷேட காவல்துறை அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு பகல் வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி யாழ்ப்பாண காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இரு நாட்களில் சுன்னாக சந்தை பகுதியில் சிவில் உடையில் நின்ற காவல்துறை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் மீது வாள் வீச்சு மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

காவல்துறை மீதான வாள் வெட்டினை தாமே மேற்கொண்டோம் என ஆவா குழு எனும் குழு உரிமை கோரி இருந்தது. அதனை தொடர்ந்து ஆவா குழுவை கைது செய்யவென காவல்துறை விஷேட அதிரடி படையினர் , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , மற்றும் காவல்துறை விஷேட பிரிவு என ஐந்து குழுக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

அதனை தொடர்ந்து யாழில் ஆவா குழு சந்தேகநபர்கள் என பல இளைஞர்கள் கைது செய்யபப்ட்டனர். இந்நிலையில் தொடர்ந்தும் காவல்துறை விஷேட அதிரடி படையினர் இரவு பகல் வேளைகளில் வீதி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Close